ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதிகளவு முன்பதிவு பெறும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படும் என ஜியோ அறிவித்தது.

தற்போது முழுமையாக சேவைகள் ஆரம்பிபபதற்கு முன்பாகவே சில வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரீவியூ சலுகையில் 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டா பிரீவியூ சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஜிகாஃபைபர் சேவையின் வேகத்தை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தில் டேட்டாவின் வேகம் நொடிக்கு 1 ஜிபி வழங்கப்படுகிறது. ஜிகாஃபைபர் சேவையின் மூலமாக பயனர்கள் 4K தரம் கொண்ட வீடியோக்களையும் ஸ்டிரீம் செய்து கண்டுகளிக்க முடியும். முன்பதிவு செய்யக்கோரும் வலைத்தளத்தில் ஜிகாபிட் பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தும் போது விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை விளையாட முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை பயன்படுத்த பாதுகாப்பு முன்பணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜியோ மனி அல்லது பே.டி.எம். மூலம் முதற்கட்ட முன்பண கட்டணத்தைச் செலுத்த முடியும். மொபைல் வயர்லெஸ் சேவையை போன்றே பிராட்பேன்ட் சேவைகளும் பிரீபெயிட் திட்டங்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

90 நாட்கள் பிரீவியூ திட்டம் நிறைவுற்றவுடன் வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் திட்டங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் ஆப்ஷன் வழங்கப்படும். சேவையை தொடர விருப்பமில்லாதவர்கள் தங்களது சேவையை துண்டித்து, பாதுபாக்கு முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் 100 ஜிபி டேட்டாவை ஒரே மாதத்திற்குள் பயன்படுத்திவிட்டால், பிரீவியூ சலுகையை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிறது. பிரீவியூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் சேர்பவர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

(இச் செய்தி பல தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here