ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. இந்த ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அனில் அம்பானிக்கு சொந்தமானது . ஜம்மு காஷ்மீரின் அரசு ஊழியர்கள் 4 லட்சம் பேர்களும் இந்த மருத்துவக் காப்பீட்டை கட்டாயமாக வாங்க வேண்டும் .

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் செப்டம்பர் 20, 2018-இல் உத்தரவு எண் 406-எஃப்டியில் தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கான ரூ.6 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகபடுத்தியது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ரிலையன்ஸ் வசம் ஒப்படைத்து மத்திய அரசு ஒப்பந்தமிட்டிருக்கிறது என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

இந்தத் திட்டம் மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு கட்டயமாக்கப்பட்டுள்ளது . பென்ஷன் வாங்குபவர்களும் மற்ற பிரிவு பணியாளர்களும், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களும் வேண்டுமென்றால் இந்தத் திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டம் , அரசு ஊழியர்களுக்கு கட்டயமாக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது.

ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட இந்த காப்பீட்டு திட்டம், மோடிக்கும் – ரிலையன்சுக்குமான தொடர்பு மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சுக்கு சாதகமாக செய்ல்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் நிசமி கூறுகிறார்.

மேலும் அரசு ஊழியர்களுக்கு கட்டயமாக்கப்பட்ட இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தைப் அனில் அம்பானியின் ரிலையன்சுக்கு கொடுத்திருப்பதை ஆதாரத்தோடு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசு துறையான எல் ஐ சி (LIC)யின் காப்பீட்டு திட்டங்களை புறக்கணித்துவிட்டு எல்லா அரசு ஊழியர்களும் அனில் அம்பானியின் மருத்துவ காப்பீட்டை வாங்க வேண்டும் என்று கூறியிருப்பது மோடி அனில் அம்பானிக்கு எவ்வாறெல்லாம் சாதகமாக செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது. இதனால் முதல் வருடத்திலேயே ரூ8000 கோடி கிடைக்கும் .

மோடி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் , நாட்டின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான கௌதம் அதானிக்கும், அனில் அம்பானிக்கும் சாதகமாக செயல்படுவதிலேயே இருக்கிறார் என்று மற்றவர்களும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

பிடிஐ செய்தியின்படி , இது தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கான ரூ.6 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும் இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டிருப்பதன் முலம் ஒவ்வொருவரையும் பலிகடா ஆக்கியுள்ளது . இது முற்றிலும் நியாயமற்றது மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு பெரிய சுமையாக உள்ளது என்று அரசு ஊழியர்களுக்கான குழு கூறியுள்ளது . இந்த செயல் நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கும் வகையில் இருக்கும் இந்தத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அந்தக் குழு கோரியுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமான கோப்புகள் நிதி துறை இணையத்தளத்தில் காணவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.

இதுகுறித்து ஸ்ரீநகரில் , ஜம்மு – காஷ்மீர் அரசு செய்தித் தொடர்பாளர் – ஜம்மு-காஷ்மீர் அரசால் அண்மையில் தொடங்கப்பட்ட காப்பீட்டு திட்டம் குறித்து தேவையில்லாத சந்தேகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. முதல் முறை, ஒரு அரசு நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்தது. ஆதலால், இது திறக்கப்படவில்லை. இதையடுத்து, 2ஆவது முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அப்போது தகுதிவாய்ந்த 5 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டன. அதில் ரிலையன்ஸ் ஜெனரல் காப்பீட்டு நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் ப்ரீமியம் தொகையாக ரூ.8,776 குறிப்பிட்டிருந்தது. ரிலையன்ஸை காட்டிலும் தேசிய காப்பீட்டு நிறுவனம், ஐசிஐசிஐ லம்பார்டு, பஜாஜ் அலையன்ஸ், யுனைடெட் இந்தியா அஸ்ஸூரன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களும் அதிக ப்ரீமியம் தொகை கோரியிருந்தன’ என்றார்.

Courtesy : The Quint

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்