பாகுபலி இரு பாகங்களின் வசூலும், பிரபலமும் அதன் நாயகன் பிரபாஸை மிக உயரத்தில் வைத்திருக்கிறது. பாகுபலிக்குப் பிறகு பிரபாஸின் அடுத்தப் படத்தை இந்தியாவே எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப சாஹேn – பிரபாஸ் நடிக்கும் படம் – தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.

பாகுபலிக்கு இணையான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் ஷ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க, அறிமுக இயக்குநர் சுஜித் இயக்குகிறார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் இசாஹேnவின் வெளிநாடடு உரிமை மட்டும் 42 கோடிகளுக்கு விலை போயிருக்கிறது. அதேபோல் படத்தின் மும்மொழி சேட்டிலைட் ரைட்ஸ் 100 கோடிக்கு மேல் விலை பேசப்பட்டு வருகிறது. படம் வெளியாகும் முன்பே வெளிநாடு, சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ ரைட்ஸின் மூலம் 200 கோடிகளுக்கு மேல் படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here