ரிலீசுக்கு முன்பே மாஸ்டர் படம் 200 கோடிக்கு விற்பனையானதா?

0
609

விஜய்யின்  மாஸ்டர் படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோகன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைமும் கைப்பற்றியுள்ளன.

இந்த படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது முன்னனி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான east coast production நிறுவனத்தின் மகேஷ் எஸ் கோநீறு காரு என்பவர் வாங்கியுள்ளதாக தவல்கள் கசிந்துள்ளன.

லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் மாஸ்டர் படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போதே தயாரிப்பாளர் இந்த படத்தின் விநியோக உரிமையை விற்று முடித்துவிட்டனர். ப்ரீ ரிலீஸ் பிசினெஸ் மட்டும் தற்போது 200 கோடியை தொடவிருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உரிமை 68 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிகில் படத்தைவிட இது குறைந்த தொகை தான் என கூறப்படுகிறது.

ப்ரீரிலீஸ்பிசினெஸ்முழுவிவரம்இதோ:

தமிழ்நாடுஉரிமை: 68.01 crore

கேரளா: 6.25 crore

கர்நாடகா: 8.65 crore

தெலுங்குஉரிமை: 9 crore

மியூசிக்உரிமை (சோனி): 4.5 crore

வெளிநாட்டுஉரிமை: 29.5 crore

சாட்டிலைட்உரிமை (சன்டிவி): 32 crore

டிஜிட்டல்உரிமை: 20 crore

ஹிந்திஉரிமை + சாட்டிலைட் (yet to be sold): 23 crore (Expected)

மொத்தம்: 200 crore

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here