ரியல்மி SLED டிவி டீசர் வெளியீடு

Realme SLED 4K Smart TV will come with TUV Rheinland Low Blue Light certification.

0
92

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி 55 இன்ச் மாடலை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. இது உலகின் முதல் SLED 4கே ஸ்மார்ட் டிவி என ரியல்மி தெரிவித்து உள்ளது. சிறந்த துல்லியமான வண்ணங்களையும் கண்களுக்கு சிறந்த பாதுகாப்பையும் SLED வழங்கும்.

இந்த தொழில்நுட்பத்தை ரியல்மி மற்றும் ஜான் ரூமேன்ஸ் இணைந்து உருவாக்கி இருக்கின்றன.

SLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே 55 இன்ச் மாடல் டியுவி ரெயின்லேண்ட் லோ புளூ லைட் சான்று பெற்று இறுக்கிறது. OLED டிவிக்கள் தவிர இந்த சான்று பெற்ற ஒரே டிவி இது ஆகும்.

இது உங்கள் ஸ்மார்ட் டிவிக்கு மிகத் தெளிவான காட்சி அனுபவத்தையும் அதிக வண்ணங்களை வழங்க அனுமதிக்கும். புதிய டிவியுடன் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நிற்கும் புகைப்படத்தை அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 

ரியல்மே தற்போது 43 இன்ச் மற்றும் 32 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இரண்டு மாடல்களுமே எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்களைப் பயன்படுத்துகின்றன . மேலும் ஆண்ட்ராய்டை இயங்குதளம் கொண்டவை. வரவிருக்கும் ரியல்மே ஸ்லெட் 4 கே ஸ்மார்ட் டிவியும் ஆண்ட்ராய்டில் இயங்கும் என்று தெரிகிறது.

அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவிமாடல் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here