இந்தியாவில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன் தற்போது அறிமுகமாகியுள்ளது.

டூயல் சிம் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன்கள், ஆண்டுராய்டு 8.1 ஓரியோ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. போன் ஸ்க்ரீன் 6.3 இன்ச் (1080×2340) பிக்சல்ஸ், ஃபுல் எச்.டி டிஸ்ப்ளே, 19:5:9 ரேசியோவைக் கொண்டுள்ளது. 256 ஜிபி நீட்டிக்கும் வசதி உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, 16 மெகா-பிக்சல் சென்சார், f/1.7 அபெர்சர், 6P லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம். மேலும், 2 மெகா-பிக்சல் செகண்டரி கேமரா இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, 16 மெகா-பிக்சல் ப்ரண்ட் கேமரா, f/2.0 அபெர்சர் கொண்டுள்ளது. சிறந்த செல்ஃபி போட்டோ அனுபவத்தை அளிக்கும் அல் 2.0 வசதியும் இடம் பெற்றுள்ளது.

மேலும் ஆக்சலரேஷன் சென்சார், ஜியோமாக்னெடிக் சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. நீண்ட மொபைல் அனுபவத்திற்கு 3,500mAh பவர் பாட்டரியும் இருக்கிறது. USB OTG, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத், 4G VoLTE, ஜிபிஎஸ் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ப்ளாக் சீ, ப்ளூ ஓஷன், ஐஸ் லேக் ஆகிய நிறங்களில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றன.

இதன் விலை விபரம் :

4ஜிபி RAM/ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 2 ப்ரோ போன், 13,990 ரூபாய்.

6ஜிபி RAM/ 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் 15,990 ரூபாய்க்கும் விற்பனையாக உள்ளது.

மேலும், 8ஜிபி RAM/ 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது 17,990 ரூபாய்க்கும் கிடைக்கும். அக்டோபர் 11-ம் தேதி, நள்ளிரவு 12 மணி முதல் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் ப்ளிப்கார்ட்டில் விற்பனையாக உள்ளன.

( இச் செய்தி பல தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்