இந்தியாவில் கடந்த மாதம் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில், ரியல்மி 2 ப்ரோ மாடல் விரைவில் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கூடுதல் அம்சங்களுடன் ரியல்மி 2 ப்ரோ(Realme2pro) ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டீசர் வீடியோ மற்றும் போஸ்டர் மூலம் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

டீசரில் காண்பிக்கப்படும் ரியல்மி 2 ப்ரோ வடிவமைப்பு முந்தைய ரியல்மி 2 போன்று காட்சியளிக்கிறது. இருப்பினும் ரியல்மி 2 ப்ரோ கூடுதல் சிறப்பம்சங்களோடு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

DnWeCbMV4AEZx9A

புதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, பின்புற கைரேகை சென்சார், கிளாஸ் போன்ற பின்புறமும் கொண்டிருக்கிறது. ஆனால் டைமன்ட் கட்டிங் வடிவமைப்பு புதிய ரியல்மி 2 ப்ரோ மாடலில் மிஸ்சிங்.

புதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 3 அல்லது 4 புதிய நிறங்களில் ரியல்மி 2 ப்ரோ வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here