ரியல்மி வி5 வெளியானது

Realme V5 supports 30W flash charge technology that allows for five hours of music playback with just three minutes of charging.

0
142

ரியல்மி நிறுவனத்தின் புதிய மாடலான வி5 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போனில், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டிடிஸ்ப்ளே, இதில் கார்னிங் கொரில்லா பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 6ஜி.பி அல்லது 8 ஜி.பி ரேம் உடன், மிடியாடெக் டைமென்சிடி 720 அக்டோ-கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 128 ஜி.பி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரையில் 48 எம்பி பிரைமெரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா-வொயிட்அங்கிள் + 2 எம்பி மெக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி மொனொகுரோம் என 4 கேமராக்கள் உள்ளன. அத்துடன்16 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளன.

Ee-Qy-Pwj-Vo-AMr-UWo

நீண்ட நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய வகையில் 5,000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 5ஜி நெட்வொர்க் கொண்டுஇயங்கும் எனவும், ஃபிங்கர் பிரிண்ட் சென்ஸார் இதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை, நீலம் மற்றும் சில்வர்நிறத்தில் வெளியாகியிருக்கும் இதன் விலை 6 ஜி.பி ரேம் மாடல் ரூ.15,000 க்கும், 8 ஜி.பி ரேம் மாடல் ரூ.20,400க்கும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here