ரியல்மி நிறுவனமானது புதிய வேரியண்ட்டில் தனது ரியல்மி யு1 போனை வெளியிட்டுள்ளது. அதில் 3ஜி ரேம் மற்றும் மெமரி திறன் 64ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரியல்மி யு1 போனானது, இதுவரை 2 மெமரி வகைகளிலே வெளிவந்தது. அதாவது. 3ஜிபி+32ஜிபி மற்றும் 4ஜிபி+64ஜிபி வகைகளில் மட்டும் வெளிவந்தது.

இந்தநிலையில் புதிதாக ரியல்மி யு1 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த மாடலாகவும் இல்லாமல், கூடிய மாடலாகவும் இல்லாம் இடையிலான மாடலாக வெளிவந்துள்ளது. இதன் விலையானது ரூ.10,999 ஆகும். இந்த புதிய மாடல் வரும் ஏப்.10ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

மெமரியை தவிர்த்து இதில் புதிதாக எந்த வேறுபாடும் இல்லை. இந்த ரியல்மி யு1 போனானது கடந்த நவம்பர் மாதத்தில் அறிமுகமானது. அதன் விலையானது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலை ரூ.9,999 ஆகும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது ரூ.11.999 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படும். அத்துடன் 6.3 ஃபுல் ஹெச்டி தன்மைகொண்ட எல்.இ.டி டிஸ்ப்ளே இதில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 13 எம்பி மற்றும் 2 எம்பி என இரட்டை கேமராவை கொண்டுள்ளது. முன்புறம் 25 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கூடுதலாக 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். அத்துடன் 3,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி திறனும் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here