ரியல்மி நார்சோ 20 : நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்

Realme Narzo 20 series price starts at Rs. 8,499.

0
85

ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ தொடரின் கீழ் நார்சோ 20, நார்சோ 20 ஏ, மற்றும் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட நார்சோ 20 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது.

Eib-TUqz-Vg-AA1a2q

குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கும் ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

ரியல்மி நார்சோ 20 சிறப்பம்சங்கள்:

 • 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
 • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
 • மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு
 • 4 ஜிபி LPPDDR4x ரேம்
 • 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • டூயல் சிம் ஸ்லாட்
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
 • 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
 • 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
 • 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
 • 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
 • கைரேகை சென்சார்
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • யுஎஸ்பி டைப் சி
 • 6000 எம்ஏஹெச் பேட்டரி

இதன் 4 ஜிபி, 65 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 4 ஜிபி, 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Eic-Uk-O7-UMAE0uyb

ரியல்மி நார்சோ தொடர் வெளியீட்டுடன், ரியல்மி நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை கஸ்டம்ஸ் கின் ரியல்மி யுஐ 2.0 வெளியீட்டையும் அறிவித்துள்ளது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here