ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, புவியில் இருந்து 817 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. புவியை கண்காணிக்கும் வகையில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2003ஆம் ஆண்டிலும், 2011ஆம் ஆண்டிலும் இந்த வகையான செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்