ரிசார்ட் மேனேஜர்கள் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து கோரிக்கை: பிரகாஷ் ராஜ்

0
351

எடியூரப்பா ஆட்சி அமைத்ததை, அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என கண்டித்துள்ள அவர் பொதுமக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆளுநர் காங்கிரஸ், மஜத கூட்டணியை அழைக்காமல் பாஜகவை அழைத்து ஆட்சியமைத்தது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இதை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக கண்டித்துள்ளார். பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்
”கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் எங்கு தாவினார்கள், எம்.எல்.ஏக்கள் எங்கு தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசியல் சாணக்கியத்தனங்களை கண்டுகளியுங்கள்.

அரசியலில் இறுதி தீர்ப்பு அரசியல்வாதிகளின் விளையாட்டில் எப்படியெல்லாம் மாற்றப்படுகிறது, நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பது பற்றி இப்போது கூட நாம் உணரவில்லை என்றால் மீண்டும் தோற்றுப்போவோம்.

கர்நாடக மக்களுக்கு ஒரு ப்ரேக்கிங் நியூஸ் “ ரிசார்ட் மேனேஜர்கள் ஆளுநரை சந்தித்து தங்களிடம் 116 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதால், ஆட்சியமைக்க உரிமை கோரலாம் . அரசியல் விளையாட்டு ஆரம்பமாகி விட்டது. அரசியல் விளையாட்டில் அனைவரும் குதித்துவிட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்