ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏ.பி.எஸ். வேரியன்ட் முன்பதிவு இந்திய விற்பனையாளர்கள் துவங்கி இருக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏ.பி.எஸ். வேரியன்ட் முன்பதிவு துவங்கியுள்ளது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் கிளாசிக் சிக்னல்ஸ் எடிஷன் வெளியீட்டுக்கு பின் அறிமுகமாகும் முதல் மாடலாக இருக்கிறது. சிக்னல்ஸ் எடிஷன் மாடலில் பாதுகாப்பு அம்சமாக டூயல் சேனல் யூனிட் வழங்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.1.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான மாடலை விட ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதிகமாகும். சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு ஏ.பி.எஸ். வசதியை 500 சிசி மாடல்களில் அறிமுகம் செய்தது.

புதிய ஹிமாலயன் ஏ.பி.எஸ். வேரியன்ட் விநியோகம் செப்டம்பர் மாதத்தின் முதல் இருவாரங்களில் துவங்கும் என கூறப்படுகிறது. புதிய ஏ.பி.எஸ். வெர்ஷன் ஸ்டான்டர்டு வேரியன்ட்டுக்கு மாற்றாக அமைகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாடல்களும் ஏ.பி.எஸ். யூனிட் கொண்டதாக இருக்கும் என ராயல் என்ஃபீல்டு தலைவர் ருத்ராதெஜ் சிங் தெரிவித்தார்.
news 3.003

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் இன்ஜின் ஃபியூயல் இன்ஜெக்ஷன் வசதி 2017-ம் ஆண்டு பெற்றது. இந்த மாடலில் 411 சிசி லாங்-ஸ்டிரோக், ஏர்-கூல்டு மோட்டார் டியூன் செய்யப்பட்ட இனஅஜினஅ வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினஅ 24 பி.ஹெச்.பி. பவர் @6500 ஆர்.பி.எம்., 32 என்.எம். டார்கியூ @4250 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் ஏ.பி.எஸ். சின்னம் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. 2018 ஹிமாலயன் ஏ.பி.எஸ். விலை ரூ.2.0 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் மாடல்களில் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.

courtesy: maalaimalar

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்