தெலுங்கில் ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான சுகுமாரின் ரங்கஸ்தலம் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 150 கோடிகளை படம் கடந்ததாக தகவல்கள் வருகின்றன. திருமணமான பிறகு சமந்தா நடித்த இந்தப் படத்தில் ராம் சரணுடன் அவருக்கு முத்தக் காட்சி இருந்தது. படத்தின் சக்சஸ்மீட்டில் சமந்தாவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
நான் ராம் சரணின் கன்னத்தில்தான் முத்தமிட்டேன். அதனை கேமரா ட்ரிக் மூலம் லிப் லாக் போல் காட்டினார்கள் என்றார். சமந்தா உண்மையிலேயே முத்தமிட்டதாக நினைத்து ஃபீல் செய்த ரசிகர்களுக்கு இந்த பதில் ஏமாற்றம்தான்.
திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால், அவர்களிடம் எதுவும் கேட்காத நீங்கள், திருமணமான நடிகைகள் முத்தக் காட்சியில் நடித்தால் மட்டும், ஏன் அப்படி நடித்தீர்கள் என்று கேட்பது ஏன்? என ஒரு கேள்வியை போட்டார் சமந்தா. கேள்வி கேட்ட நிருபர்களுக்கு வாயடைத்துப் போனது.
ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா? நிருபர்களே திருந்துங்க.
இதையும் படியுங்கள்: ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார் – சிக்கிய பிரபல இயக்குனர்
இதையும் படியுங்கள்: #NoIPLinChennai: சோறா, ஸ்கோரா? தெறிக்கவிட்ட தமிழ் மக்கள்
இதையும் படியுங்கள்: அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம் செய்த கோடக் மஹிந்திரா வங்கி