சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாரின் காவலை ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், ராம்குமார் என்ற குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று, ராம்குமாரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. காவல்துறையினர் மூன்று நாட்கள் விசாரணை நடத்திய பின்னர், ராம்குமாரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜ்ர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ராம்குமாரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்தநிலையில், வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து, எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமின்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்