ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரியில் பிறந்தார்; உ.பி.அயோத்தியில் கிடையாது- நேபாள பிரதமர் ஒலி

PM Oli’s remark on Ayodhya, the second in a month, comes against the backdrop of an acrimonious power struggle within the ruling Nepal Communist Party that is widely seen headed for a split

0
297

ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்; இந்தியாவின் உத்தரப்பிரதேசத்து அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை விஸ்வரூபமாக்கி இருக்கிறது. இந்தியாவுடன் மல்லுக்கட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் நேபாள பிரதமர் ஒலி. இந்திய நிலப்பகுதிகளை சொந்தம் கொண்டாடி நேபாள வரைபடத்தில் இணைத்தார் ஷர்மா ஒலி.

அத்துடன் நிற்காமல் ராமர், நேபாளத்தில்தான் பிறந்தார் என திடீரென கூறி சர்ச்சைக்கு வித்திட்டார். இதனால் அவர் பதவி விலக வேண்டிய நெருக்கடி எல்லாம் ஏற்பட்டது. ஒருவழியாக அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

ராமர் பிறந்தது தெற்கு நேபாளத்தில் அயோத்தியாபுரியில்தான்; இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இல்லவே இல்லை என மீண்டும் கூறி இருக்கிறார் ஷர்மா ஒலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here