ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை : மக்களவையில் பிரதமர் மோடி தகவல்

"We have readied a scheme for the development of Ram Temple in Ayodhya. A trust has been formed, it is called 'Sri Ram Janambhoomi Tirath Kshetra," PM Modi said in Lok Sabha

0
380

 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், பிரதமர் தெரிவித்தார்.

“ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீரத் ஷேத்ரா” என்ற பெயரில் ராமர் கோவில் கட்டுவதற்காக, அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதாகவும், பிரதமர் அறிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 5 ஏக்கர் பரப்பளவில், ராமர் கோவில் கட்டுவதற்கான செயல் திட்டம், மத்திய அரசிடம் தயாராக இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஜனநாயக நெறிமுறைகளை மதித்து, அதன்மீது நம்பிக்கை கொண்டு குறிப்பிடத்தக்க தங்கள் ஒத்துழைப்பை இந்திய மக்கள் வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதற்காக, நாட்டின் 130 கோடி மக்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ் வணக்கங்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்வுடன் குறிப்பிட்டார். இந்தியாவில் வசிக்கும், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள் உட்பட அனைத்து மதத்தினரும், ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள் என மோடி தெரிவித்தார்.

இதன் அடிப்படையிலேயே, வளர்ச்சி என்பது, ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்குமானது என்பதில், தமது அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே, அனைத்து வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன், தமது தலைமையிலான மத்திய அரசு, ஒவ்வொரு இந்தியர்களுக்காகவும் பாடுபட்டு வருவதாகவும், பிரதமர் தெரிவித்தார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here