ராமர் கோயில் பூமி பூஜை; அழைக்கப்பட்ட 200 மதகுருமார்களில் ஒருவர் கூட தலித் இல்லை என்பது குறித்த மாயாவதியின் கருத்து இதுதான்

Prime Minister Narendra Modi is scheduled to attend the big event for which Diwali-like preparations are in full swing.

0
243

அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கு தலித் பிரிவைச் சேர்ந்த மதக்குருக்களும்  அழைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி கூறியுள்ளார். 

உ.பி.யின் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5 இல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் மோஹன் பகவத் உள்ளிட்ட 200 முக்கியப் பிரமுகர்கள் மட்டும் அழைக்கப்படுகின்றனர்.

இந்த விழாவிற்கு தாம் அழைக்கப்படவில்லை என பிரயாக்ராஜில் உள்ள தலித் சமூகத்தின் மதக்குரு மஹாமண்டலேஷ்வர் சுவாமி கன்னைய்யா பிரபுநந்தன் கிரி புகார் தெரிவித்துள்ளார்.

இதை குறிப்பிட்ட மாயாவதி தன் டிவிட்டர் பக்கத்தில், ‘தலித் மஹாமண்டலேஷ்வர் சுவாமி கன்னைய்யா பிரபுநந்தன் புகாரின்படி அவரும் ஆகஸ்ட் 5 இல் அயோத்தியின் ராமர் கோயில் பூமி பூஜைக்கு 200 பேர்களில் ஒருவராக அழைக்கப்பட வேண்டும்.

இது நம் நாட்டின் அரசியலமைப்பின்படி மதசார்பற்ற சமூகம் அமைக்கும் நோக்கத்திற்கு உதவும்.’ எனக் குறிப்பிட்டவர் மற்றொரு ட்விட்டும் பதிவு செய்துள்ளார்.

மற்றுமொரு டிவீட்டில், ‘சாதிபாகுபாடுகளினால் தலித்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் பாபா சாஹேப் அம்பேத்கரின் பாதையை பின்பற்ற வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here