ராமரை கடவுள் என்று நம்பாதீர்கள் – பாஜக கூட்டணி கட்சி தலைவர்

0
256

பாஜக கூட்டணியில் இருக்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும்,  பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி, ராமரை கடவுள் என்று நம்பாதீர்கள் , நான் ராமரை கடவுள் என்று நம்பவில்லை என்றும் துளசிதாசர், வால்மீகி ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பரப்ப உருவாக்கிய கதாபாத்திரம் தான் ராமர் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ள விழாவில், ஜிதன் ராம் மாஞ்சி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

“ராமரை கடவுள் என்று நம்பாதீர்கள் நான் ராமரை நம்பவில்லை. அவர் கடவுள் இல்லை. துளசிதாசர், வால்மீகி ஆகியோர் தங்களுடைய கருத்துக்களைப் பரப்ப உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான் ராமர். அவர்கள் ராமாயணத்தை எழுதினார்கள். அதில் பல நல்ல பாடங்கள் உள்ளன. நாங்கள் துளசிதாசர் மற்றும் வால்மீகியை நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

இதையும்  படியுங்கள்👇

நீங்கள் ராமரை நம்பினால், சபரி கடித்துக் கொடுத்த பழத்தை ராமர் சாப்பிட்டதாக நாங்கள் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் கடித்துக் கொடுத்தப் பழத்தை நீங்கள் சாப்பிட வேண்டாம். எங்கள் கைப்பட்ட பழத்தையாவது சாப்பிடுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இங்கு, ஏழை மற்றும் பணக்காரன் என இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன” என்று ஜிதன் ராம் மாஞ்சி குறிப்பிட்டுள்ளார்

ஒன்றிய முன்னாள்  அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மறைந்ததையடுத்து, முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த ஜிதன் ராம் மாஞ்சி, பீகார் மாநிலத்தில் உள்ள முக்கிய தலித் தலைவராக உருவெடுத்துள்ளார்.

பீகாரில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவரான ஜிதன் ராம் மாஞ்சி, ராமர் பற்றித் தெரிவித்திருக்கும் இக்கருத்து ஆளும் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக அடங்கிய பீகார் அமைச்சரவையில் ஜிதன் ராம் மாஞ்சியின் மகன், சந்தோஷ் மாஞ்சி இடம்பெற்றுள்ளார் . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here