ஜம்மு காஷ்மீரில் கல்வீசிப் போராட்டத்தில் ஈடுபட்டவரை, ராணுவ ஜீப்பில் கட்டி வைத்தற்கு பதிலாக, எழுத்தாளர் அருந்ததி ராயை, ஜீப்பில் கட்டி வைக்கலாம் என நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பரேஷ் ராவல் என்பவரின் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஆச்சரியம்…. கான் விழாவில் சங்கமித்ராவுடன் இடம்பிடித்த மருதநாயகம்

பாஜகவின் எம்பியான பரேஷ் ராவல் தனது டுவிட்டர் பக்கத்தில், ”கல்வீசிப் போராட்டத்தில் ஈடுபட்டவரை, ராணுவ ஜீப்பில் கட்டி வைத்தற்கு பதிலாக, எழுத்தாளர் அருந்ததி ராயை, ஜீப்பில் கட்டி வைக்கலாம்” என பதிவிட்டிருந்தார். bjp-mp

அவரின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரின் கருத்திற்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன. காங்கிரசின் மூத்தத் தலைவரான திக் விஜய்சிங், பரேஷ் ராவலலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

bjp-1

முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் கல்லெறிவதைத் தடுக்கும் விதமாக, ராணுவ ஜீப்பில் போராட்டக்காரரைக் கட்டி வைத்ததாக ராணுவம் அளித்த விளக்கம் பலரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்