ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜேஷ் தாஸ் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பெண் எஸ்.பி ஒருவரிடம் ராஜேஷ் தாஸ் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அந்த பெண் எஸ்.பி காவல்துறை டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஆறு பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்தில் காவல்துறையில் மிக உயர்ந்த பொறுப்பான சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக ராஜேஷ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here