ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா தமிழகம் படைப்போம்

இப்போது டாட் காமின் தொலைநோக்கு முயற்சி ஆரம்பிக்கிறது.

0
2190

தமிழ்நாட்டில் வருடந்தோறும் பதினாறாயிரத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்; இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகமாக நிகழ்கின்றன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau) புள்ளி விவரங்கள் கூறுகின்றன; ஒரு லட்சம் பேரில் 26 பேர் தற்கொலை செய்துகொள்வது தமிழ்ச் சமூகத்தில் நிலவி வரும் வறுமை, வன்முறை என்று பல்வேறு பிரச்சினைகளின் வெளிப்பாடுதான். ஒரு லட்சம் மக்களுக்கு 25 மனநல மருத்துவர்கள் இருக்க வேண்டிய நம் நாட்டில் மூன்றரை லட்சம் மக்களுக்கு ஒரு மனநல மருத்துவர்தான் இருக்கிறார். தற்கொலை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் இப்போது டாட் காமின் முயற்சியில் உங்களை இணைத்துக்கொள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலும் இப்போதைப் பதிவிறக்கம் செய்யுங்கள். @ippodhuவுக்கு ட்வீட் செய்யுங்கள்; editor@ippodhu.comக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

டாக்டர் என்.ரங்கராஜன் தமிழ்நாடே நன்கறிந்த மனநல மருத்துவர்; பெங்களூருவில் தேசிய மனநல ஆராய்ச்சி நிறுவனத்திலும் வெளிநாடுகளிலும் பயின்றவர். அவர் உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் இந்தப் பகுதியில் உங்களது கேள்விகளும் விரைவில் இடம்பெறும். கேள்விகளை @ippodhuவுக்கு ட்வீட் செய்யுங்கள்; editor@ippodhu.comக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

கேள்வி: எங்களுக்குக் கல்யாணமாகி அஞ்சு வருசமாகுது; குழந்தை இல்லை; எங்களைப் பாக்குறவங்கள் எல்லாம், துக்கம் விசாரிக்கிற மாதிரி கேக்குறாங்க; ஏதாவது ஒரு ஃபங்சனுக்குப் போனாகூட எல்லாரும் குழந்தையில்லாததைப் பத்திதான் கேக்குறாங்க; யாராவது ரெண்டு பேர் சும்மா பேசிக்கிட்டு நின்னாகூட நம்மளைப் பத்திதான் பேசுறாங்களோன்னு நினைக்கத் தோணுது; நாங்க ரொம்பவே விரக்தியா இருக்கோம்.
ரமேஷ், (32) உஷா(29) தம்பதியினர், திருமுல்லைவயல், சென்னை

மனநல மருத்துவர் டாக்டர் என்.ரங்கராஜனின் பதில்:

எல்லோருக்குமே ஒரு குடும்பம் வேணும், குழந்தை வேணும்கிற ஆசை இருக்கிறது இயல்பு; சாதாரணமா நம்ம சொசைட்டில கல்யாணமாகிட்டா தலை தீபாவளிக்குக் குழந்தையோட நிக்கணும்ன்னு சொல்றது வழக்கம்; ஒருத்தருங்களுக்குக் குழந்தை இல்லன்னா அவங்களப் பாக்கும்போதெல்லாம் என்னாச்சு, இந்தக் கோவிலுக்குப் போங்க, அந்த டாக்டரப் பாருங்க, அந்த ஆஸ்பத்திரிக்குப் போங்கன்னு பலவிதமான அட்வைஸ் பண்றதுக்கு எல்லாரும் ரெடி; யாரையுமே நீங்க ஏன் குழந்தை பெத்துக்கலைன்னு ஊர்ல எல்லாருமே கேப்பாங்க; வேற வழியில்ல; உங்கள எல்லாரும் துக்கம் விசாரிக்கிற மாதிரி கேக்கிறாங்கன்னா, இது நீங்க செஞ்ச தப்பு இல்ல; இந்த சொசைட்டி எல்லாருடைய விஷயத்திலயும் மூக்க நுழைக்கிற அட்டிடியூட் இருக்கிற சொசைட்டி; சரி, உங்களுக்கு யாராவது பேசிக்கிட்டிருந்தாக்கூட நம்மளப் பத்தித்தான் பேசுறாங்கன்னு நினைக்கத் தோணுதில்லயா? அது உங்களுக்கு வரக்கூடிய ஒரு கஷ்டம்தான்; நிஜமா யாரும் பேசவில்லை; ”அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” அப்படிங்கிற மாதிரி எங்க போனாலும் இதப் பத்திதான் கேப்பாங்க, பேசுவாங்கங்கிற கஷ்டத்தில இருக்கீங்க; விரக்தியா இருக்கீங்க. முகத்தில் விரக்தி தெரியும்போது பாக்கிறவங்களுக்கெல்லாம் ‘ஏன் இப்படி இருக்கீங்க?’, ‘குழந்த இல்லியா இன்னும்’ அப்படின்னு கேக்கத் தோணும். முகத்துல விரக்திய காட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா, நிச்சயமா நாலு பேர் அதப் பத்தித்தான் கேட்பாங்க.

உங்களுக்குக் குழந்தை இல்லைன்னா, அதுக்குண்டான வழி இருக்கும்; தேவையான மெடிக்கல் செக்கப் செய்யலாம்; மெடிக்கல் செக்கப்பில் ஏதாவது வழி இருக்குன்னு தெரிஞ்சா அதற்கு செலவழிக்க சக்தி இருந்தா நிச்சயமா அந்த வகையான ட்ரீட்மென்டுக்குப் போங்க; அப்படி இல்ல, இரண்டு பேரில யாருக்காவது பிரச்சினைன்னு செக்கப்பில தெரிஞ்சா, அதனால குழந்தை பெத்துக்க வாய்ப்பு இல்லைன்னு தெரிஞ்சா, தயவு செய்து தயங்காம அழகான ஒரு குழந்தய தத்தெடுக்கிறது பற்றி யோசியுங்க; உங்களுக்குப் பிடிச்ச மாதிரி குழந்தய தத்தெடுக்க சட்டரீதியான வழிகள் இருக்கு; தத்தெடுத்தலுக்கு உதவும் அரசு நிறுவனங்களின் தொடர்பு விவரங்கள் இங்கே முழுமையாக வழங்கப்பட்டுள்ளன; http://www.tn.gov.in/adoption/ மகப்பேறு சோதனைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் சோதனை விபரங்களை இங்கே பாருங்கள்; http://www.tnhealth.org/health_services.htm உங்களுக்கு அருகிலேயே இந்த வசதிகள் கட்டணமில்லாமல் அரசால் வழங்கப்படுகின்றன; உங்களது ஏக்கம் நியாயமானதுதான்; ஆனால் வாழ்வில் சந்தோஷப்படவும் கொண்டாடவும் நிறைய இருக்கு; எப்பவும் கவலை தோய்ந்த முகத்தோட இருக்க வேண்டாம்.

(விரைவில் மீண்டும் சந்திப்போம்)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்