ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவடத்தில், லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாகக் கூறி இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில், இளைஞர் ஒருவரை, இந்துத்துவா அடிப்படைவாதி ஒருவர் கொடூர ஆயுதத்தால் தாக்குவது போன்றும், படுகாயமடைந்த அவர் மீது தீவைப்பது போன்ற காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர் மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முஹம்மது அஃப்ரசூல் என்றும் தெரிய வந்தது. மேலும் அந்த நபரை அடித்துக் கொல்பவர் ராஜ்சமந்த்தைச் சேர்ந்த, ஷாம்புலால் எனவும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஷாம்புலாலின் கூட்டாளிகள் பெண் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர், குலாப் சந்த் கட்டாரியா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு, சிறப்பு விசாரணை குழுவிற்கு மாற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நன்றி: scroll.in

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்