ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், , தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. இறுதிக்கட்டமாக கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. ஆட்சியமைக்கப்போவது யார் என்ற தகவல்கள் பிற்பகலுக்குள் தெரியவரும்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது . தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மத்திய பிரதேசம்:

230 இடங்கள்

வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றிபெற வேண்டும்

காங்கிரஸ்- 104,

பாஜக- 96

பிஎஸ்பி – 6

ராஜஸ்தான்:

199 இடங்கள்

காங்கிரஸ்- 101

பாஜக- 78

பிஎஸ்பி – 3

சட்டீஸ்கர்:

காங்கிரஸ்- 51

பாஜக- 28

பிஎஸ்பி- 3

தெலங்கானா:

தெலங்கானா ராஷ்டிர சமிதி- 82

காங்கிரஸ்- 24

பாஜக- 5

மிசோரம்:

எம்என்எப்-14

காங்கிரஸ் -6

பாஜக- 1

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் மிசோராமில் எம் என் எஃப் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here