ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சாலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, பாரன் மாவட்டத்தில் உள்ள கிஷான்கன்ஜ் தொகுதிக்கு உட்பட்ட ஷாஹாபாத் பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய அப்துல் ரஃபீக் மற்றும் பத்வாரி நவல் சிங் என 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தனர்.

ராஜஸ்தானில் மொத்தம் 4.76 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 51,965 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 1.44 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜல்ராபதான் நகர வாக்குச்சாவடியில் முதல்வர் வசுந்தரா ராஜே வாக்களித்தார். அவர் நிருபர்களிடம் கூறியபோது, மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஜெய்ப்பூரின் ஜலுபுரா வாக்குச்சாவடியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவர் கூறியபோது, “பெரும் பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி யைக் கைப்பற்றும்” என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், ஜோத்பூரில் வாக்களித்தார்.

காலையில் மந்தமாக இருந்த வாக்குப் பதிவு பிற்பகலில் விறுவிறுப்படைந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 72.83 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here