ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நித்யா மேனனை நடிக்க வைக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கான், அலியா பட் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களுடன் இங்கிலாந்து நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில் நித்யா மேனனை புதிதாக படத்தில் ஒப்பந்தம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்யா மேனன் சாவித்ரியாக நடித்திருந்த லட்சுமியின் என்டிஆர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அத்துடன் ப்ரியதர்ஷினியின் அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

ராஜமௌலி படத்தில் அவர் நடிக்கிறாரா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் உறுதிச் செய்யப்படும் என்கின்றன ஹைதராபாத்திலிரந்து வரும் தகவல்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here