ராஜமௌலி படத்தில் நித்யா மேனனுக்கு என்ன வேடம்?

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தது. இப்போது அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பாகுபலி முதலிரு பாகங்களுக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் என்ற படத்தை தொடங்கியுள்ளார் ராஜமௌலி. இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நாயகர்களாக நடிக்க, சில இந்தி நட்சத்திரங்கள் உள்பட ஏராளமானோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நித்யா மேனன் கடைசியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்தப் படத்தில் நித்யா மேனனுக்கு கிராமத்து பெண் வேடம் என்பதும், அவர் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக வருகிறார் என்பதும் படக்குழுவிடமிருந்து கசிந்துள்ளது. படத்தின் இன்னொரு நாயகன் ராம் சரணுக்கு ஜோடியாக இந்தி நடிகை அலியா பட் நடிக்கிறார்.

அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here