ராஜமௌலியின் RRR – புதிய அப்டேட்

ராஜமௌலி தனது படம் RRR குறித்து புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாகுபலி 2 படத்தைத் தொடர்ந்து அதேபோல் இன்னொரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. RRR என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் இணைந்து நடிக்கின்றனர். ப்ரியாமணி, ரம்யா கிருஷ்ணன் போன்ற சிலரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 11 ஆம் தேதி படம் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் ராஜமௌலி ட்விட்டரில் படம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

RRR படத்தின் முதல் ஷெட்யூல்ட் முடிந்துவிட்டதாகவும், ஓட்டு போடுவதற்கு வந்திருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கு ஓட்டுப்போட சொந்த ஊருக்கு ராஜமௌலி வந்துள்ளார். இந்த செய்தியுடன் தனது படத்தின் முதல் ஷெட்யூல்ட் முடிந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here