பாகுபலி 2 படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்து வருகின்றனர். ஆர்ஆர்ஆர் என தற்காலிகமாக இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டன.

1. ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இருவரும் ராஜமௌலியின் புதிய படத்தில் நாயகர்களாக நடிக்கின்றனர். இதில் ராம் சரண்க்கு அலியா பட்டும், ஜுனியர் என்டிஆருக்கு டெய்சி என்ற வெளிநாட்டு நடிகையும் ஜோடியாக நடிக்கின்றனர்.

2. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய அல்லுரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

3. இந்தி நடிகர் அஜய் தேவ்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் நடிகர், இயக்குநர் சமுத்திரகனிக்கும் முக்கிய வேடம் உள்ளது.

4. ஆர்ஆர்ஆர் என தற்காலிகமாக வைத்த பெயரையே படத்தின் நிரந்தர பெயராக்கியிருக்கிறார்கள்.

5. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் படம் தயாராகிறது. மேலும் சில இந்திய மொழிகளில் படத்தை டப் செய்யும் எண்ணமும் உள்ளது.

6. 2020 ஜுலை 30 படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here