ராங்கிக்காக உஸ்பெகிஸ்தான் பறக்கும் த்ரிஷா

0
106

ராங்கி படத்துக்காக த்ரிஷாவும் படக்குழுவும் விரைவில் உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறது. 

தனி நாயகியாக அதிக படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். அதில் ஒன்று ராங்கி. எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை உஸ்பெகிஸ்தானில் படமாக்குவது என முடிவு செய்துள்ளனர். அதற்காக விரைவில் உஸ்பெஸ்கிஸ்தான் செல்லவுள்ளனர். இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் த்ரிஷா இந்தப் படத்தில் தோன்றுகிறார்.

இதுதவிர, சிம்ரனுடன் இணைந்து ஒரு படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். த்ரிஷாவின் 60 வது படமான பரமபதம் விளையாட்டு விரைவில் வெளியாக உள்ளது.

இவைகள் தவிர கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 என சில படங்களும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here