ராகுல் சுட்டிக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர் செல்லா நோட்டு நடவடிக்கைக்கு ஆதரவு

0
187

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் மத்திய மோடி அரசு அறிவித்தது .

கறுப்புப் பணத்தை மீட்கவும், பயங்கரவாத செயல்களை தடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும்
இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவுபெற்றதை அடுத்து இந்த நாளை கறுப்புப் பண ஒழிப்பு நாளாக பாஜக அறிவித்துள்ளது. ஆனால், இது நாட்டின் கறுப்பு தினம் எனக் கூறி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், செல்லாநோட்டு நடவடிக்கையால்
முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பாதிப்படைந்தார் போன்ற போட்டோவை பதிவிட்டிருந்தார். கூடவே ‘சாமானியனின்
ஒரு துளிக் கண்ணீர் கூட அரசுக்கு நல்லதல்ல. இந்த கண்ணீர் ஒருநாள் கடலாக மாறும் என்பது நினைவில் இருக்கட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த போட்டோவில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் “ மோடி அரசின் செல்லா நோட்டு நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் , இந்த நடவடிக்கையால் சில நாட்கள் சிரமமாக இருந்தது , அப்புறம் எல்லாமே சரியாகிவிட்டது என்றும் , நான் ஒரு ராணுவ வீரன் என்ற முறையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : டெங்குவா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ அவசர நிலையை ஏன் அறிவிக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்