காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பொறுப்பில்லாத தலைவர் என பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.

திரிபுரா, மேகலாயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களும் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டவை. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமையும் (பிப்.27), திரிபுரா மாநிலத்தில் கடந்த பிப்.18ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சனிக்கிழமை (இன்று) நடைபெற்று வருகிறது. இதில் திரிபுராவில் 35 இடங்களிலும், நாகாலாந்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 30 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. திரிபுராவில் மற்றும் நாகாலாந்தில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

giri

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், ராகுல் காந்திக்கு தேர்தல் முடிவுகள் ஏற்கனவே தெரிந்துவிட்டதால் முன்கூட்டியே அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும் அவர், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் எந்த ஒரு தலைவரும் வெளிநாட்டிற்கு செல்லமாட்டார்கள் என்றும், ராகுல் காந்தி ஒரு பொறுப்பில்லாத தலைவர் என்றும் விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here