காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இயக்குநர் பா.ரஞ்சித்தும் செவ்வாய்கிழமை சந்தித்துள்ளனர். நடிகர் கலையரசனும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்

“மெட்ராஸ், கபாலி மற்றும் காலா போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் நேற்று சந்தித்தேன். நாங்கள் அரசியல், திரைப்படம் மற்றும் சமூகம் குறித்து பேசினோம். இந்த உரையாடல் எனக்கு மகிழ்ச்சியளித்தது. இந்த உரையாடல் மேலும் தொடர்வதை எதிர்நோக்கி இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் .

இதற்குமுன், குஜராத் சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியும் ரஞ்சித்தும் சந்தித்தனர். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜகவை எதிர்ப்பதற்காக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த வட்கம் தொகுதியை ஜிக்னேஷ் மேவானிக்காக விட்டுக்கொடுத்து அவருக்கு ஆதரவாக வாக்கும் சேகரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here