ராகுல் காந்தியுடன் குஜராத் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி சந்திப்பு

0
635
ராகுல் காந்தியுடன் ஜிக்னேஷ் மேவானி

குஜராத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலித் சமூக தலைவர் ஜிக்னெஷ் மேவானி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

டிசம்பர் 2017 சட்ட மன்ற தேர்தலை சந்திக்க உள்ள குஜராத்தில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வெள்ளிகிழமை குஜராத்தின் வல்ஸாத் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த ராகுல் காந்தியை தலித் தலைவர் ஜிக்னெஷ் மேவானி சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் அசோக் கெஹ்லாட், குஜராத் மாநில கட்சி தலைவர் பரத்சின் சொலான்கி முன்னிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்புக்கு பின்னர் பேசிய ஜிக்னெஷ் மேவானி, எங்களது கோரிக்கைகளில் 90 சதவீதத்தை ஏற்று, அவற்றை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாகவும் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்தார். மேலும் யுனாவில் தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், நாங்கள் பல போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் ஆரம்பித்தோம். இது குறித்து பல்வேறு கோரிக்கைகளை மாநில பாஜக அரசிடம் முன்வைத்தோம். அவற்றை பாஜக கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் எங்கள் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டுள்ளது. எனது சமூகத்தினரை பாஜகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொள்வேன் என்றும் ஜிக்னெஷ் மேவானி தெரிவித்தார்.

சந்திப்புக்கு பின்னர் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி , நாங்கள் எல்லோருடைய பிரச்சினைகளையும் கேட்டு அவர்களுடன் வேலை செய்கிறோம். இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்போம், மக்களுக்காக வேலை செய்யும் அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம் என்று தெரிவித்தார்.

2

இதையும் படியுங்கள் : உலக அளவில் செல்வாக்கு படைத்த 5 இந்தியப் பெண்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்