ராகுல் காந்தியின் டிவீட்டுக்கு பதிலடி கொடுத்த அர்விந்த் கெஜ்ரிவால் ; காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமையுமா?

0
231

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்கத் தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக கூட்டணி குறித்து பேசியுள்ளார். இது குறித்த செய்தியை ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்தார். 

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்  ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைக்கிறது என்றால் அதற்கு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் (U turn) இதற்கு உடன்படவில்லை, கூட்டணிக்கு எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கிறது, ஆனால் நேரம் குறைந்துக் கொண்டே வருகிறது என்று பதிவிட்டுள்ளார். 

ராகுல் காந்தியின் டிவீட்டுக்கு பதிலளித்து டிவீட் செய்த  அர்விந்த் கெஜ்ரிவால் என்ன U-turn? இன்னும் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டுதான் இருக்கிறது . கூட்டணி உங்களது எண்ணம் அல்ல .  நீங்கள் பெரிய அறிக்கைகளை  மட்டுமே வெளியிடுவது என்னை வருத்ததிற்கு உள்ளாக்கியுள்ளது. தற்போது மோடியிடமிருந்தும், அமித் ஷாவிடமிருந்தும் நாட்டைக் காப்பதுதான் முக்கியமான வேலையாக இருக்கிறது . நீங்கள் மோடிக்கு எதிரான ஓட்டுகளை உத்தரபிரதேசத்திலும், மற்ற மாநிலங்களிலும் பிரிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று பதிவிட்டுள்ளார்.  

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால் அமித் ஷாவிடமிருந்தும், மோடியிடம் இருந்தும் நாட்டைக்  காப்பாற்ற நாங்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

பஞ்சாபில்  ஆம் ஆத்மி கட்சிக்கு 4 எம்.பி.க்கள், 20 எம்எல்ஏக்கள் உள்ளனர். இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஹரியானாவில்  காங்கிரசுக்கு ஒரேயொரு எம்.பி. மட்டும் உள்ளார். இங்கும் ஆம் ஆத்மியுடன்  காங்கிரஸ் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here