ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

0
364

இன்று (ஜூன் 19) பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்தநாள் . 2017 டிசம்பர் மாதம் அவர் காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.

அவரது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை கொண்டாடிவருகின்றனர் . குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் என களைகட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவிட்டுள்ளார். ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் விழாக்கள் மட்டுமின்றி, கோயில்களில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டு ராகுல் காந்தி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உதவி வழங்குகின்றனர்.