ராகுலை விமர்சிக்க முயன்று தர்மசங்கடத்துக்கு ஆளான ஸ்மிருதி இரானி (Video)

0
328

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தபடி கடன்களை மாநில காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்து விட்டதா’ என்று கேட்டுள்ளார். இதற்கு ஆமாம் ஆமாம் என அங்கிருந்த மக்கள் கத்தினார்கள். இதனால் ஸ்மிருதி இரானிக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. 

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ ட்விட்டரில் ஷேர் செய்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி, பாஜகவினரின் பொய்களை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் என்று பதிவிட்டுள்ளது 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். 

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலின்போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான் காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதியாகும். அதன்படி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here