தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி வாய்ப்புக்காக சினிமாவில் உள்ள பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள், நடிகர்கள் மற்றும் பாடகர் ஸ்ரீரெட்டியால் குற்றம்சாட்டப்பட்டனர்.

தெலுங்கு திரையுலகுடன் ஒப்பிடுகையில் தமிழ் சினிமா நன்றாக உள்ளது. இங்குள்ள ஒரேயொரு இயக்குநர் மட்டுமே என்னிடம் தவறாக நடந்து கொண்டார். மற்றவர்கள் கண்ணியமாக என்னை நடத்தினர் என தெலுங்கிலிருந்து தமிழுக்கு ஸ்ரீரெட்டி புயல் மையம் கொண்டது. முதலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார். அடுத்த நடிகர் ஸ்ரீகாந்த். இவர்கள் இருவரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் கூறவில்லை. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வாய்ப்பு தருவதாகக்கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

“ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். after dat he did a ride on me…. ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை.”

ராகவா லாரன்ஸ் தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டார் என பகிரங்கமாக ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். லாரன்சின் பதில் என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

sri reddy

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்