ரஹ்மான் இசையில் நடிப்பது வரம். மணிரத்னம் இயக்க, ரஹ்மான் இசையமைக்கும் காற்று வெளியிடை படத்தில் நடிக்கும் வாய்ப்பு மயிரிழையில் நழுவிப் போனது சாய் பல்லவிக்கு. அவருக்கு குரு இப்போது உச்சத்தில். நழுவியது நாலாக மடிந்து தானாக கையில் உட்காரும். இந்த மாதம் தொடங்கவிருக்கும் ராஜீவ் மேனன் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். படத்துக்கு இசையமைப்பது, ரஹ்மான்.

மின்சார கனவுக்குப் பிறகு தமிழ் பக்கம் எட்டிப் பார்க்காமலிருந்த ராஜீவ் மேனன் மீண்டும் தமிழ்ப் படம் இயக்குவது என்று முடிவு செய்துள்ளார். நாயகன் ஜீ.வி.பிரகாஷ். இது ஏற்கனவே முடிவான விஷயம். நாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. இந்த மாதம் படப்பிடிப்புக்கு கிளம்ப இருக்கும் நிலையில், சாய் பல்லவியை நாயகியாக்கியுள்ளனர். மணிரத்னம் படத்தை தவறவிட்ட அவருக்கு இது அதனை இட்டு நிரப்பும் இனிய வாய்ப்பு.

மகிழ்ச்சியான விஷயம், இந்தப் படத்தில் மொத்தம் 9 பாடல்கள்.

ரஹ்மான் ட்ரீட்டுன்னு சொல்லுங்க.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்