விஜய் நடிப்பில் சர்கார் படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 19 முக்கியமான அறிவிப்பு வெளியிட இருப்பதாக, சர்காரை தயாரித்துவரும் சன் பிக்சர்ஸ் கூறியிருந்தது. இந்நிலையில், இன்று (செப்.19) காலை, சர்கார் படத்தின் முதல் பாடலை செப்டம்பர் 24 மாலை ஆறு மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்துக்கும் ரஹ்மானே இசை. அவரது இசையில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சர்கார் பாடலும் வெளியாகப் போகிறது.

சர்கார் அரசியல் பின்னணியில் தயாராகிறது. சூப்பர் ஹீரோ ஸேnரோ போன்று மக்களுக்காக போராடுகிற, மக்கள் பக்கம் நிற்கிற கதாபாத்திரத்தில் விஜய் சர்காரில் நடித்துள்ளதாக ராதாரவி கூறியுள்ளார். அவரும் சர்காரில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்