ரஷ்ய விமான விமானம் விபத்துக்குள்ளானதில் 91 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சோச்சி பகுதியிலிருந்து, 83 பயணிகள் மற்றும் எட்டு விமான பணியாட்களுடன் சிரியாவின் லடாகியா நோக்கி புறப்பட்ட Tu-154 ரக விமானம் மாயமானது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தைத் தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் கோனஷென்கோவ் தெரிவித்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ரஷ்ய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

அலெக்சாண்ட்ரவ் என்செம்பிள், இசைக்குழுவினர்
அலெக்சாண்ட்ரவ் என்செம்பிள், இசைக்குழுவினர்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 64 பேர், அந்நாட்டு ராணுவத்தின் அலெக்சாண்ட்ரவ் என்செம்பிள் என்னும் இசைக்குழுவைச் சேர்ந்தவர்கள். சிரியாவில் உள்ள ரஷ்ய ராணுவ வீரர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடுவதற்காகச் சென்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்