ரஷ்யா மற்றும் மெக்சிகோவில் அதிகரிக்கும் கொரோனா

The developers of Russia’s second vaccine against COVID-19 on Friday said mass production would begin in 2021, as Russia reported a record daily increase in coronavirus infections.

0
232

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 461 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 15.50 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4.53 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 11-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், மெக்சிகோவில் ஒரே நாளில் 576 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் அங்கு பலி எண்ணிக்கை ஒருலட்சத்தைக் கடந்துள்ளது. 

மேலும் 4,472 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

7.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here