ரஷியாவில் இருந்து 200 தமிழ் மாணவர்களை அழைத்து வந்த சோனுசூட்

Sonu Sood most recently helped 100 medical students from Tamil Nadu and one from Delhi who were stranded in Moscow, Russia amid the ongoing lockdown reach Chennai.

0
136

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும் சோனு சூட், சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியால் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, தனது சொந்த செலவில் பஸ், ரெயில், விமானத்தில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். 

ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். காய்கறி விற்ற பொறியல் பட்டதாரி பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தார். கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலை இழந்த 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தவித்த 200 மாணவர்களை சென்னைக்கு தனி விமானத்தில் அழைத்து வந்து உதவி உள்ளார். மாஸ்கோவில் மருத்துவம் படித்து வந்த 200 மாணவர்கள் படிப்பு காலம் முடிந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்கள் சோனுசூட்டுக்கு தங்கள் நிலைமையை விளக்கி மெயில் அனுப்பி உள்ளனர்.

அதன்பிறகு அவர்களை தொடர்பு கொண்டு பேசிய சோனுசூட் அவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த விமானத்தில் 200பேர் நேற்று(புதன்கிழமை)  அதிகாலை சென்னை வந்தனர். இவர்களில் 90 பேருக்கான கட்டணத்தை சோனுசூட் செலுத்தி உள்ளார். இந்நிலையில்அனைத்து மாணவர்களும் முழு மனதுடன் நடிகர் சோனு சூட்க்கு நன்றி தெரிவித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here