ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை : இணைப்பை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு

Google launched Station in India in 2015, as a partnership between Google, Indian Railways and Railtel to bring fast, free public WiFi to over 400 of the busiest railway stations in India and crossed that number by June 2018. While the Indian Railways provided the fibre connectivity for the Internet, Google was responsible for installing and maintaining the access points.

0
242

கூகுள் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் இலவச வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி நைஜீரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ரயில் நிலையங்களில் இணைய சேவை பயன்பாட்டிற்காக இலவச வைஃபை இணைப்பை கூகுள் நிறுவனம் வழங்கி வந்தது.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக இந்தச் சேவை பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த  கூகுளின் துணைத் தலைவர் சீசர் குப்தா, உலகிலேயே அதிக அளவில் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், இங்கு விலை குறைந்த இணைய சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் போன் மூலம் எளிதில் இணையத்தைமக்கள் பயன்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here