சஹர் உணவு வீட்டில் இல்லாதவர்களுக்கு எங்கு கிடைக்கும் என்பதை பற்றிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் காலையில் நோன்பு தொடங்கி மாலையில் முடிப்பது வழக்கம். காலையில் சூரியன் வரும் முன்னரே சாப்பிட வேண்டும். அதேபோல மாலையில் சூரியன் மறையும் வேளையில் சாப்பிட வேண்டும். இடையில் தண்ணீர்க் கூட அருந்த மாட்டார்கள். 

காலையில் நோன்பு தொடங்கும்போது சாப்பிடும் உணவு சஹர் எனப்படும். மாலையில் நோன்பு முடிக்கும்போது சாப்பிடும் உணவு இஃப்தார் எனப்படும் . பொதுவாக இந்த இஃப்தார் உணவு என்பது எளிதாக கிடைக்கும். ஆனால் சஹர் உணவு எளிதில் கிடைக்காது. வீட்டில் இல்லாதவர்களுக்கு இந்த சஹர் எங்கு கிடைக்கும் என்பதை பற்றிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

 சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள்:

1. அடையார் – ஹோட்டல் டாப்பர் (Hotel Topper)அடையார் பஸ் டிப்போ அருகே உள்ள மஸ்ஜித் வளாகத்தில் சஹர் உணவு கிடைக்கிறது. காலை 3 மணி முதல் 4 மணி வரை கிடைக்கும்

2. கிண்டி– ஆலந்தூர் மஸ்ஜித் வளாகம் ஹேடிஸ், எம்.கே.என் சாலை, ஆலந்தூர். 3 மணிமுதல் 4.30 மணி வரை உணவு கிடைக்கும். மாலையில் 21,23,25,27 & 29ஆகிய தேதிகளில் கிடைக்கும்.

3. கோடம்பாக்கம்– கோடம்பாக்கம் பாலம் அருகே உள்ள ஹோட்டல் உடுப்பியில் சஹர் உணாவுகள் கிடக்கிறது.

4. தி.நகர் – ஹோட்டல் விருதுநகரில் ரமலான் முழுவதும் சஹர் உணவு கிடைக்கும். நம்பர் – 77, ஜி.என் செட்டி ரோடு, பனகல் பார்க், டி.நகர்.

5. கே.கே. நகர் – பனாமா கிட்சன் ஹோட்டலில் இலவசமாக காலை 3 மணி முதல் 4 மணி வரை சஹர் உணவு கிடைக்கும்.

6. திருவல்லிக்கேணி – ஹோட்டல் சஹரில் ரமலான் முழுவதும் சஹர் உணவு கிடைக்கும்.

7.சூளைமேடு – பாஷா தெருவில் உள்ள மஸ்ஜித் மஸ்ஜித்-ல் ரமலான் முடியும் கடைசி 10 நாட்களுக்கு சஹர் உணவுகள் வழங்கப்படும்.

8. ரமலான் முழுவதும் தரமணி தவ்ஹீத் பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. சோழிங்கநல்லூர் முகம்மது சதாக் கல்லூரிக்கு எதிராக உள்ள மஸ்ஜித்-ல் ரமலான் முழுவதும் சஹர் கிடைக்கும்.

10. அரும்பாக்கத்தில் உள்ள எம்.எம்.டி.ஏ. மஸ்ஜித்- ல் சஹர் உணவு கிடைக்கும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here