கர்நாடகாவை விட்டு காங்கிரஸ் வெளியேறுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தங்களது தீவிர பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, கர்நாடகாவை விட்டு காங்கிரஸ் வெளியேறுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார். மேலும் அவர் பாரதிய ஜனதா கட்சி என்றால் வளர்ச்சி, காங்கிரஸ் என்றால் ஊழல் என்றுதான் அர்த்தம் என்றார்.

ரப்பர் செருப்பு அணிபவர்கூட விமானத்தில் பறக்க முடியும் என்ற நிலை வரவேண்டும் என்பதே தனது கனவு என்றார். முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் ஒரு கோடி மக்களுக்கும்மேல் கடன் பெற்றுள்ளதாகவும், கர்நாடகாவில் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் 1.16 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்