இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது ஒரு நாள் ஆட்டத்தை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-2 என சமன் செய்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒரு நாள் ஆட்டம் நேற்று மொஹாலியில் நடைபெற்றது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவும், மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வென்றன.

நான்காவது ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்கார்களாக ரோஹித், தவான் களமிறங்கினர்.

அதிரடியாக ஆடிய ரோஹித், ஹை ரிச்சர்ட்ஸன் பந்துவீச்சில் சதத்தை பூர்த்தி செய்யாமலேயே ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 92 பந்துகளில் 95 ரன்களை விளாசினார் ரோஹித். முதல் விக்கெட்டுக்கு ரோஹித், தவான் இருவரும் இணைந்து 193 ரன்களை சேர்த்திருந்தனர்.

பின்னர் கே.எல். ராகுல் களமிறங்கினார்.

மற்றொருபுறம் அதிரடியாக ஆடிய ஷிகர் தவன் தனது 16 ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். இவர் 97 பந்துகளில் அவர் சதமடித்தார். ஷிகர் தவன் 3 சிக்ஸர், 18 பவுண்டரியுடன் 115 பந்துகளில் 143 ரன்களை விளாசி பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் லோகேஷ் ராகுல் 26 ரன்களுக்கும், கேப்டன் விராட் கோலி, 7 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 36 ரன்களும், கேதார் ஜாதவ் 10 ரன்களுக்கு, விஜய் சங்கர் கடைசி வரிசையில் அதிரடியாக ஆடி 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 15 பந்துகளில் 26 ரன்களை விளாசி, அணியின் ஸ்கோர் 350-ஐ தாண்டச் செய்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். ஹை ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்டைச் சாய்த்தார்.

359 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷான் மார்ஷும் வெறும் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் இணை நிதானமாக ஆடி ரன்களை எடுத்தனர். இந்நிலையில் 7ஆவது ஒருநாள் அரை சதத்தை பதிவு செய்த உஸ்மான் கவாஜா 7 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். 7 பவுண்டரியுடன் 99 பந்துகளில் 91 ரன்களை எடுத்த அவர், பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.

பின்னர் வந்த மேக்ஸ்வெல் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 23 ரன்களை அடித்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது 229/4 ரன்களை ஆஸி. எடுத்திருந்தது.

இந்நிலையில், நிடானமாக ஆடிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 92 பந்துகளில் 100 ரன்களை அவர் எடுத்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் 117 ரன்கள்(3 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 105 பந்துகள்) எடுத்திருந்த போது, சஹல் பந்துவீச்சில் வெளியேறினார்.

ஆனாலும் தனது அதிரடி ஆட்டதால் அஷ்டன் டர்னர் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் 84 (6 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 43 பந்துகள்) ரன்களை அடித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். அலெக்ஸ் கரே 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

2 ஓவர்கள் மீதமிருக்க 6 விக்கெட்டை மட்டுமே இழந்த ஆஸி. அணி 359 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 2-2 என சமன் செய்தது.

இந்திய தர்ப்பில் சஹல் 80 ரன்களையும் புவனேஸ்வர் 67 ரன்களையும், பும்ரா 63 ரன்களையும், குல்தீப் 64 ரன்களையும் வாரி வழங்கினர்.

தில்லியில் கடைசி ஒரு நாள் ஆட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here