ரஞ்சன் கோகோய்க்கு எதிராக கார்ப்பரேட் நிறுவனத்தின் சதி; சிபிஐ, உளவுப் பிரிவு இயக்குநர்கள், காவல் ஆணையர் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
141

தலைமை நீதிபதிக்கு எதிராக போலியான பாலியல் வழக்கு தொடர ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறிய வழக்கறிஞர் ஒரு பெரிய கார்ப்பேரேட் நிறுவனம் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

வழக்கறிஞர் உத்சவ் சிங் பெய்ன்ஸ் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாயை சிக்கவைத்து பதவிவிலக வைப்பதற்காக சதி நடக்கிறது.  ரொமேஷ் சர்மா என்பவர் சமீபத்தில் என்னை அணுகி, தலைமை நீதிபதிக்கு எதிராக போலியான பாலியல் புகாரை பதிவு செய்ய உதவ வேண்டும், பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்  கூறினார். அதற்காக என்னிடம் ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டது. ஆனால், அதற்கு நான் மறுத்துவிட்டேன் என்று கூறினார். இந்தச் சதிக்கு  பின்னால் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனம் இயங்குகிறது என்று அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக சிசிடிவி கேமாரா காட்சிகளை சமர்பித்தார். அந்தக் காட்சிகள் அவர் கூறியதுடன் ஒத்து போனதால் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சிபிஐ மற்றும் உளவுப் பிரிவு இயக்குநர்களும், டெல்லி காவல் ஆணையரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமை நீதிபதி தருண் கோகாய்க்கு எதிராக பொய் வழக்கு புனையும் இந்த கார்ப்பரேட் நிறுவனம் இதற்கு முன்பும் பல வழக்குகளில் சாட்சிகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்றும் வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் கூறியுள்ளார். 


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மிக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூற சதி நடைபெறுவதாக வழக்குரைஞர் பெயின்ஸ் தெரிவித்திருந்தார். அது குறித்து தன்னிடம் இருந்த ஆவணங்களை சீல் வைத்த உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் பெயின்ஸ்.

இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை குறித்து, சிபிஐ இயக்குநர், உளவுப் பிரிவு இயக்குநர், டெல்லி காவல் ஆணையர் ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் அறையில் இவர்கள் மூவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து என்னென்ன விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இவர்களுக்கு அறிவுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here