ரஜினி, கமல் என்ற இமேஜை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது – இயக்குனர் அதிரடி

0
443
Rajinikanth & Kamal Haasan

ரஜினி, கமல் என்ற இமேஜை மட்டும் வைத்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் அமீர் கூறினார்.

இயக்குனர் அமீர் தமிழ் தேசிய அரசியலை பேசி வருகிறவர். அதுசார்ந்த கருத்தியலை தொடர்ந்து முன்வைக்கும் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியவர், “ரஜினி, கமல் என்ற இமேஜை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது. அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கும், ஆனால் அவை வெற்றி பெறக்கூடிய வாக்குகளாக அமையாது. இருவருமே 10 சதவீத வாக்குகளை பெறலாம். அவர்கள் என்ன கொள்கைகளை முன்எடுக்கிறார்கள், யாருடன் சேர்ந்து அரசியலுக்கு வருகிறார்கள் என்பதைத் தான் பார்க்க வேண்டும்” என்றார்.

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வேறு, அவர்களுடன் ரஜினி, கமலை ஒப்பிட கூடாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றவர், “தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று நான் நினைப்பது எங்களின் உரிமை. தமிழ்நாட்டில் நல்லவர்களே இல்லையா? பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் நல்லவர்களாக இருக்கிறார்களா? நடிகர் ரஜினியும், விஷாலும் தான் நல்லவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியவர், “தமிழ் தேசியம் பேசும் எங்களிடம் ஒரு முறை ஆட்சியை கொடுத்துப் பாருங்கள், நாங்கள் இந்த கேள்வியைக் கேட்கும் போதே ஏன் தடை போடுகிறீர்கள்” என்றார்.

இதையும் படியுங்கள்: ஜிஎஸ்டி: வரி குறைக்கப்பட்ட பொருட்கள் எவை?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்