ரஜினி அரசியலுக்கு வரலாமா? – நடிகர் செந்தில் சொல்வதை கேளுங்க

0
255
Senthil & Rajinikanth

வழக்கம் போல ஆண்டவன் சொன்னால் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க போய்விட்டார். வேலைவெட்டி இல்லாதவர்கள் அதையே ஒரு பொழுதுபோக்காக்கி அடித்துக் கொள்கிறார்கள். ரஜினி எப்படி அரசியலுக்கு வரலாம் என்று ஒருசாரர். அவர் அரசியலுக்கு வந்தே ஆகணும் என்று இன்னொருதரப்பு. வரும்போது பார்த்துக்கலாம் என்று மற்றெnரு கோஷ்டி.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான நடிகர் செந்தில் இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார்?

அதிமுகவைப் பொறுத்தவரை ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்ற எண்ணம்தான் பரவலாக இருக்கிறது. அவர் வந்து அணையில் தெர்மோக்கோல்விடுவதை இப்போதே நம்ம மினிஸ்டர் செல்லுnர் ராஜு செய்கிறாரே என்ற நியாயமான வாதம் அவர்களுக்கு. சிங்கமுத்து நேரடியாகவே ரஜினியை தாக்கிப் பேசியிருக்கிறார். ஆனால், உடன் நடித்தவர் என்பதால் செந்திலின் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது.

தமிழகத்தில் இப்போதுள்ள நிலைமையே இருந்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும். அவர் இந்தியர் என்றார் செந்தில்.

இந்தியர் அனைவரும் அரசியலுக்கு வரலாம் என்ற இந்திய அரசியல் சட்டத்தை இதன் மூலம் செந்தில் வழிமொழிந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள் : தீயிலிருந்து எங்களைக் காப்பாற்றியது ரமலான்”

இதையும் படியுங்கள் : செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இதைப் பாருங்கள்

இதையும் படியுங்கள் : மாட்டிறைச்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பதில் இது

இதையும் படியுங்கள் : திமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கைது; ‘எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் பதவிக்கு இது அழகல்ல’

இதையும் படியுங்கள் : விவசாயிகளையும் ஏழைகளையும் மோடி அரசு கைவிட்டது ஏன்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்